அரசியல்உள்நாடு

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே. எஸ். யு. பிரேமசந்திர, கே. பிரியந்த பெர்னாண்டோ ,ஏ. பிரேமசங்கர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி

மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட S.M.சபீஸ்!

editor

பிள்ளையான் போன்ற ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் – சஜித் தெரிவிப்பு

editor