அரசியல்உள்நாடு

மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை உருவாக்கி விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (26) மீண்டும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில் இந்த வழக்கு இணைய வழி ஊடாக அழைக்கப்பட்டது.

இதன்போது, அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதவான் காஞ்சனா சில்வா, தற்போது விளக்கமறியலில் உள்ள மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஏனைய நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்போது, பிரசன்ன ரணவீரவால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வீதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது

editor

மூதூர் பிரதேச சபையின் செயலாளராக எம் ஐ எம்.ஜெம்சித் கடமை ஏற்பு

editor

நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்க திகதி வழங்குமாறு கோரி சபாநாயகர் அலுவலகம் முற்றுகை [VIDEO]