வகைப்படுத்தப்படாத

மென்செஸ்டரில் இடம்பெற்ற தாக்குதலால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

(UDHAYAM, MANCHESTER) – இங்கிலாந்தில் மென்செஸ்டர் பகுதியில் அமெரிக்க பாடகி அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சியில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியதாக இந்த தாக்குதலில் இருந்து தப்பித்த அமெரிக்க பாடகி அரியானா க்ராண்டே கூறியுள்ளார்.

இந்த தாக்குதலால் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இடைநிறுத்திய பிரதமர் தெரசா மே, அந்த நாட்டு பாதுகாப்பு சபையை அவசரமாக அழைத்துள்ளார்.

Related posts

Commander meets ‘Paada Yathra’ pilgrims in Yala

தமிழகத்தில் ஈழ அகதியொருவர் தற்கொலை?

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கிம் ஜோங் உன்