வகைப்படுத்தப்படாத

மெட்ரொ ரெயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பேருந்து – 4 பேர் பலி

(UTV|RUSSIA)-ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதை அருகே இன்று வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென சுரங்கப்பாதையை நோக்கி பாய்ந்தது. இதில், அங்கு சென்று கொண்டிருந்த நான்கு பேர் பலியானதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் வாகனங்கள் மூலமாக தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இதுவும் அதுபோன்ற தாக்குதலாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், போலீசார் அதை மறுத்துள்ளனர். பேருந்தை ஓட்டிவந்த டிரைவரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் கூறியுள்ளனர்.

மாஸ்கோ நகரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தால் பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்று டிரைவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட ஜாதிக ஹெல உறுமய

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் அதிகாரிகள்

முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் கைது