உலகம்

மெக்ஸிகோவில் Johnson & Johnson தடுப்பூசிக்கு அனுமதி

(UTV |  மெக்ஸிகோ) – அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி ஒரே டோஸில் கொரோனா எதிர்ப்பு தன்மையை உருவாக்கும் நிலையில் மெக்ஸிகோவில் இதற்கான அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி சமீபத்தில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது.

மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலையில் இந்த தடுப்பூசி ஒரே டோசில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மெக்சிகோவும் அனுமதி அளித்துள்ளது. மெக்ஸிகோவில் ஏற்கனவே பைசர், கோவாக்சின், ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஹாங்காங்- ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் 4 பேர் இராஜினாமா

காசாவில் தொடரும் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களில் மேலும் 42 பலஸ்தீனர்கள் பலி

editor

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் தாய்லாந்துக்கு!

editor