உலகம்

மெக்சிகோவில் நிலநடுக்கம்

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான குரேரோவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது குரேரோ மாநிலத்தின் சான் மார்கோஸ் நகருக்கு அருகில், பிரபலமான சுற்றுலாத் தலமான அகாபுல்கோவிற்கு அருகில் ஏற்பட்டுள்ளது.

வலுவான நிலநடுக்கம் இருந்தபோதிலும், இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது கடுமையான காயங்களோ பதிவாகவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சொத்து சேதத்தை விசாரிக்க தொடர்புடைய துறைகள் இப்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

Related posts

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!

WTO-வின் முதல் பெண் தலைவராக நிகோசி நியமனம்

ஈரான் உயர் நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் பலி

editor