உள்நாடு

மூன்று விவசாயிகளின் உயிரினை பறித்த மின்னல்

(UTV | முல்லைத்தீவு) – முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் நேற்று(15) மாலை உயிரிழந்தனர்.

தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் கடும் மழையு பெய்துள்ளதுடன், மின்னல் தாக்கமும் ஏற்பட்டிருந்தது.

இதன்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குமுழமுனை மேற்கு, குமுழமுனை மத்தி, வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதான ஆண்கள் மூவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Related posts

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 53 பேர் கடற்படையினர்

ரிப்கான் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 107 அரசியல் கட்சிகள், 49 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல்

editor