உள்நாடுபிராந்தியம்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 5 பேர் காயம்

குருணாகல் – புத்தளம் வீதியில் பாதெனிய மற்றும் அவுலேகம ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காரில் பயணித்த இருவரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீண்டும் அதிகரித்த தேங்காய் விலை

editor

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்ன

editor

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

editor