உள்நாடு

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV| கொழும்பு) – கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா அகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த மூன்று மாவட்டங்களில் நேற்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதாக நிறுவகத்தின் மண்சரிவு தொடர்பான ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மண்சரிவு எச்சரிக்கை இன்று(23) இரவு 8.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மழையுடன் கூடிய வானிலையால் மிகவும் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சுகபோக வாகன ஏலத்தின் முதற் கட்டம் ஆரம்பம்

editor

இன்றைய வானிலை அறிக்கை