உள்நாடு

மூன்று மணித்தியாலங்களில் PCR பெறுபேறு

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை(25) முதல் இதனூடாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஹிரு செய்திகள் ஊடாக வெளிக்கொண்டுவரப்பட்ட, பிசிஆர் பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் வரையில் கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவோரிடம் அதிக கட்டணங்களை வசூலிக்கும் மோசடி செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

இன்று அரச விடுமுறை தினம் அல்ல

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி