உள்நாடு

மூன்று நாட்களில் அதிவேக வீதியில் 134 மில்லியன் வருமானம்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, அதிவேக வீதியில் கடந்த 3 நாட்களில் 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மட்டும் 387,000 வாகனங்கள் அதிவேக வீதியில் இயக்கப்பட்டதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. டி. கஹடபிடிய தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம், இந்த வீதியில் 10 கோடியே 23 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருவாய் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக வீதியில் பயணித்த 297,736 வாகனங்களிலிருந்து ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

மின் கட்டணம் குறைக்கப்படும் என எவரும் கூறவில்லை – 37% அதிகரிக்க வேண்டும் – மின்சார அமைச்சர் குமார ஜயக்கொடி | வீடியோ

editor

ஆமி சமந்தவை விசாரணை செய்ய அனுமதி