அரசியல்உள்நாடு

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவுகளை ஒப்படைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவுகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 35 வேட்பாளர்கள் தமது அறிக்கைகளை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பத்தரமுல்லை சீலரதன தேரர், சரத் கீர்த்திரத்ன மற்றும் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் ஆகிய மூன்று வேட்பாளர்களும் வருமானம் மற்றும் செலவுகளை ஒப்படைக்கவில்லை எனவும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை இந்திய படகு சேவை விரைவில் ஆரம்பம் !

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய மின்வெட்டு தொடர்பில் கண்டனம்