விளையாட்டு

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து சந்திமால் நீக்கம்

(UTV|COLOMBO)-உடற்கட்டு பரிசோதனையில் தேர்ச்சியடையாத காரணத்தால் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு அணிகளுக்குமிடையில் காலியில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சந்திமால் உபாதைக்குள்ளானார்.

இதன் காரணமாக இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மஹிந்தானந்தாவை விசாரிக்க ICC தயராகிறது

சன்ரைசர்ஸ் Playoff சுற்றுக்கு தகுதி

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்