உள்நாடுபிராந்தியம்

மூன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு 24 வயதுடைய தாயும் தற்கொலை – இலங்கையை உலுக்கிய சம்பவம்

படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தமது குழந்தையைக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட குழந்தை மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை எனவும், தற்கொலை செய்துகொண்ட பெண் 24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.