உள்நாடுபிராந்தியம்

மூதூர் பொலீஸ் நிலையத்தின் சிறுவர் தின நிகழ்வு.

மூதூர் பொலீஸ் நிலையத்தினால் சிறுவர்களுக்கான சிறப்பு சிறுவர் தின நிகழ்வு இன்று (07) செவ்வாய்க்கிழமை, மூதூர் பொலீஸ் நிலைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மல்லிகை தீவு சாரதா இல்லத்தில் வசிக்கும் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் மற்றும் மூதூர் ரைஸ் மில் அத்பாள் நிலையத்தில் தங்கியுள்ள பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு ஜெயசிங்க உதவி போலீஸ் அத்தியட்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில், மூதூர் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஆர்.எல்.பி. மஞ்சுல ஜெயவர்தன அவர்களின் தலைமையில், மூதூர் பொலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் முஸ்லிம் விவாக பதிவாளர் முகமது யூசுப் முகமது லாபீர் அவர்கள் கலந்து கொண்டள்ளார்.

நிகழ்வில் சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மற்றும் மகிழ்ச்சிகரமான கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதன பசளை விநியோகம்

சீனக்கப்பல் குறித்து இந்தியா அதிருப்தி!

மக்களின் வாழ்க்கை சீர்குலைத்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor