அரசியல்உள்நாடுபிராந்தியம்

மூதூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான கண்ணி பாதீடு நிறைவேற்றம்

திருகோணமலை மூதூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான கண்ணி பாதீடு, இன்றைய தினம் (18) வியாழக்கிழமை நடைபெற்ற சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மூதூர் பிரதேச சபையின் பாதீட்டு சபைக்கூட்டம், கௌரவ தவிசாளர் திருமதி செல்வரத்தினம் பிரகலாதன் தலைமையில் இன்று ஆரம்பமானது.

இக்கூட்டத்தின் போது தவிசாளர் பாதீட்டு உரையை முன்வைத்தார்.

தொடர்ந்து, பாதீடு தொடர்பாக சபை உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

22 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், 19 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், 03 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதன் அடிப்படையில், மூதூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

ஜனாதிபதி தேர்தல் – சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது – நிஹால் தல்துவ

editor

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு

editor

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா

editor