உள்நாடுபிராந்தியம்

மூதூர், நெய்தல் நகர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை – மரம் முறிந்து வீடு சேதம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக காற்றுடன் க கூடிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.

திடீரென அதிகரித்த பலத்த காற்றின் தாக்கம் காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சேதத்தையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையே, நெய்தல் நகர் கிராமத்தில் இன்று (27) வீசிய பலத்த காற்றினால் மரம் முறிந்து அருகிலிருந்த வீட்டின் மீது சரிந்தது.

வீட்டின் கூரையையும் சுவர்களையும் முற்றுமுழுதாக சேதப்படுத்தியுள்ளன. வீட்டு பல பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

ஆனால், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாதது பெரும் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி – பிரதமர்

கோட்டா நாளை நாட்டுக்கு

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவையில் தாமதம்