மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலாபொல பிரதேசத்தில் தற்போது வெள்ள நீர் வேகமாக பரவி வருகின்றது.
இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக உடைப்பெடுத்த நீலாபொல அனைக்கட்டு ஊடாகவே தற்பொழுது நீர் அதிக வேகத்தில் பரவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக 64ஆம் கட்டை சூரங்கள் செல்லக்கூடிய உள்வீதியில் அமைந்துள்ள 15வாய்க்கால் வயல் பகுதி தற்போது முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையைத் தொடர்ந்து மூதூர் பிரதேசத்தில் உள்ள தாழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
