உள்நாடுபிராந்தியம்

மூதூர் இறால் குழி திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி சேதம் – புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

மூதூர் – இறால்குழி பிரதேசத்தின் ஊடாக செல்லும் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் முழுமையாக சேதமடைந்தது.

இதனால் வாகன போக்குவரத்தும், அத்தியாவசிய தேவைகளின் விநியோகமும் தடைபட்டு, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று (03) அதிகாலை 6.00 மணியளவில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அருண் ஹேமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விஜயம் செய்தார்.

அமைச்சர், இறால்குழி பகுதியில் சேதமடைந்த சாலை பகுதிகளை பார்வையிட்டு, உடனடியாக தீர்வு காணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இராணுவத்தினர் இணைந்து அவசர சாலை புனரமைப்பு பணிகளை தொடங்கியதுடன், தற்காலிக வழிச்சந்தை அமைப்பு இடம்பெற்றது.

அத்துடன் மூதூர் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்ட அமைப்பாளர் ரம்சின் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்

ஒரு நாளுக்குள் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் சாலை தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து மெதுவாக மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வெள்ளத்தால் நீரில் மூழ்கிய மூதூர் பிரதேசத்திலுள்ள சில வீடுகளும் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரனால் நேரில் பார்வையிடப்பட்டன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகள் குறித்தும், உடனடி உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு – கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

editor

மத்திய மலையக பகுதிகளில் தொடரும் வரட்ச்சி

தேசிய விருது விழாவில் கிழக்கு மாகாணத்தின் பெருமைசேர்த்த சப்னாஸ்!

editor