உள்நாடுபிராந்தியம்

மூதூர், அறபாநகர் பாலத்திற்கான மீள் கட்டுமாண பணிக்கான அடிக்கல் நாட்டல்

மூதூர் -அறபாநகர் பாலத்திற்கான மீள் கட்டுமாண பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று செவ்வாய்கி,மை (02) காலை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ,பிரதி அமைச்சிர் அருண் ஹேமச்சந்திரா,பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தனர்.

மாகாண சபையின் விசேட அபிவிருத்தி நிதி (PSDG) ஒதுக்கீட்டின் 43 மில்லியன் ரூபாய் செலவில் மூதூர் -அறபாநகர் பாலமானது மீள் புனர் நிர்மாணம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூர் ஆட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ,மூதூர் பிரதேச செயலாளர் ,மூதூர் பிரதேச சபையின் செயலாளர், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடுத்தக்கது.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 6 வயது சிறுமி பலி

editor

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று