நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின் தாக்கத்தால் மூதூர் பகுதியும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.
குறிப்பாக, மூதூர் நீலா பொல பிரதேசத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சுத்திகரிப்பு பொறிகளை இயக்க தேவையான பொருட்களை கொண்டு செல்லும் முக்கிய வீதி முழுமையாக சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக, அவசியமான பொருட்கள் கடல் மார்க்கம் வழியாக மட்டுமே கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீலாப் பொல நீர் ஊந்து நிலையத்திற்கு தேவையான டீசல் எரிபொருள் கலன்களை கடல் மார்க்கம் மூலம் இரண்டாவது நாளாக இலங்கை கடற்படையினர் மற்றும் தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் இணைந்து எடுத்துச் செல்லும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
