மூதூர் மெடிக்கல் கேம் ஏற்பாடு செய்த மாபெரும் இலவச வைத்திய முகாம் இன்று (சனிக்கிழமை) மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை 8.00 மணியில் தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த வைத்திய முகாம், சுகாதார அமைச்சு திணைக்களம், ஆயுள் வேத திணைக்களம், இராணுவம், கடற்படை, மற்றும் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இம்முகாமில் ஆங்கில முறை சிகிச்சை மற்றும் ஆயுள் வேத சிகிச்சை என இரண்டு பிரிவுகளாக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 30 வைத்தியர்கள் உட்பட பல்வேறு வைத்திய நிபுணர்கள் இந்த முகாமில் பங்கேற்று,
இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கினர்.
மூதூர், தோப்பூர், சேனையூர், சம்பூர் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் நோயாளர்கள் இம்முகாமில் பங்கேற்று இலவச சிகிச்சை பெற்றனர்.
-முஹம்மது ஜிப்ரான்
