உள்நாடுபிராந்தியம்

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப்பேரணி நாளை

காசா மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் மிகக்கடுமையான மனிதாபிமான அற்ற நிலைமையை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக குரல் கொடுத்து, உயிர் காப்போம் என்ற தொனிப்பொருள் வெளிப்படுத்தும் வகையில், ஒரு அமைதிப் பேரணி நடத்த .ஙதீர்மானிக்கப்பட்டுள்ளது

மூதூரில் பலஸ்தீனம் மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் அமைதிப் பேரணி நாளை(05 ) வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையுடன் இடம்பெற உள்ளது.

மூதூரில் உள்ள ஜும்மா பள்ளிகளில் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் மூதூர் அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாசலில் இருந்து மூதூர் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மகஜரை ஒன்று கையளிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

இந்நிகழ்வில் விசேடமாக சகோதரர் ரஸ்மின் (எம்ஐசி) அவர்களும் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க உள்ளார்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள்

editor

பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்

வுஹானில் இருந்து வந்த 33 மாணவர்களும் வீடு திரும்புகின்றனர்