உள்நாடு

மூதூரில் நாளை நீர் துண்டிப்பு.

மூதூர் நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபை சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ள இருப்பதால் நாளை (04) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மூதூர் மற்றும் அதைச் சூழ்ந்துள்ள பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், திருத்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக நீர் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மூதூர் நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகின்றது.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

நாட்டின் அமைதியைப் பாதுகாக்க முப்படையினருக்கும் அழைப்பு

கைது செய்யப்பட்டோர் மார்ச் 16 ம் திகதி வரை விளக்கமறியல்

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றமிட்ட உத்தரவு