மூதூர் மின்சார சபையினால் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென மின் துடிப்பு மற்றும் மின் துண்டிப்பு ஏற்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மூதூரில் தற்போது இதுவே பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஒரு நாளில் ஒருமுறை அல்லது இருமுறை மின் துண்டிப்பு ஏற்பட்டால் அது சகித்துக்கொள்ளத்தக்கதாக இருக்கும்.
ஆனால் தற்போது ஒரு நாளில் பல முறை திடீரென மின் துண்டிப்பு நடைபெறுவதால் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
மின்சார சபை இதனை தொழில்நுட்ப கோளாறு என விளக்கினாலும், பொதுமக்கள் கேள்வி எழுப்புவது – “ஒவ்வொரு நாளும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறதா?” என்பதாகும்.
மேலும், மின் துண்டிப்பு செய்யப்படும் சமயங்களில் கூட குறைந்தபட்சம் முன் அறிவிப்பு வழங்கப்படவில்லை என்பதையும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மின்சார சபை விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
-முஹம்மது ஜிப்ரான்