உள்நாடுபிராந்தியம்

மூதூரில் ‘சுவையாரம்’ பாரம்பரிய ஆரோக்கிய உணவகம் திறப்பு

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கிறிஸ்சலிஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ‘சுவையாரம்’ நஞ்சு அற்ற பாரம்பரிய ஆரோக்கிய உணவகம் இன்று (25) மூதூர் பொது சிறுவர் விளையாட்டு பூங்கா வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் அவர்களின் அழைப்பின் பேரில், மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களால் கிறிஸ்சலிஸ் நிறுவனத்தின் முகாமையாளர் நசிர் மற்றும் பிராந்திய முகாமையாளர் சம்சூதின் அனைத்து மத தலைவர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இவ்வுணவகம் திறந்து வைக்கப்பட்டது.

மூதூர் பிரதேச மக்கள் அனைவரும் ‘சுவையாரம்’ பாரம்பரிய ஆரோக்கிய உணவகத்தைப் பயன்படுத்தி நன்மை பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு

மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – துமிந்த சில்வா மனு தாக்கல்

editor

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம் [VIDEO]