உள்நாடுபிராந்தியம்

மூதூரில் கோர விபத்து – ஒருவர் பலி – மற்றுமொருவர் படுகாயம்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-எஸ்.கீதபொன்கலன்

Related posts

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

editor

13 ஆவது திருத்தம் நாட்டுக்கு அவசியமானது – விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ரணில் அறிவிப்பு

திக்கற்றுச் சென்ற பொருளாதாரத்தையே நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor