மூதூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 26 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் ஹபீப் நகர் மற்றும் ஹைரியா நகர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூதூர் மண்ணை பாதுகாக்கும் காவல் தெய்வங்களின் முயற்சியால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
