உள்நாடு

மூடப்பட்ட முச்சக்கர வண்டியில் 12 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 42 வயது நபர் கைது

12 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பதில் நீதவான் வீரேந்தா கனன்கேகே நேற்று (07) உத்தரவிட்டார்.

கடுவெல, வெலிவிட்ட, போகஹவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பியகம பொலிஸ் பல்வேறு புகார்கள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிலந்த ராஜகருணாவுக்கு தனி நபரொருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 06 திகதி பியகம பகுதியில் உள்ள களனி ஆற்றின் கரையோரத்தில் இரு பக்கங்களும் மூடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பாடசாலை சீருடை அணிந்திருந்த மாணவியுடன் இந்நபர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்தள்ளது.

சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியும், முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

பியகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வீரசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேகநபரை வழக்கு நடவடிக்கைப் பிரிவின் பொலிஸ் சார்ஜென்ட் சுசந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

Related posts

மாளிகாவத்தையில் நிவாரணம் வழங்கிய இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு

முட்டை இறக்குமதி தொடரும்

வாகன சேவைக் கட்டணமும் அதிகரிப்பு