உள்நாடு

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு

(UTVNEWS | TRINCOMALEE) – கிண்ணியா – மூதூர் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளனர்.

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், இன்று (08) கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

ரிஷாதின் கைது தொடர்பில் லக்ஷமன் கிரியெல்ல கேள்வி

வவுனியா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சை கூடச் செயற்பாடுகள் ஆரம்பம்

editor

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்