சூடான செய்திகள் 1

முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விசேட தேடுதல்

(UTVNEWS|COLOMBO) – முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றினை நேற்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையானது நேற்று மாலை 4 மணி அளவில் அம்பாறை மாவட்டத்தின் முன்னெடுக்கப்பட்டதுடன் கல்முனை சாய்ந்தமருது பகுதி எல்லையில் அமைந்துள்ள மையவாடி மற்றும் தனியார் மரக்காலைகளில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி இராணுவத்தினரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதி வீதிகள் இராணுவத்தினரால் போக்குவரத்திற்காக மறிக்கப்பட்டதுடன் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனினும் எதுவித ஆயுதங்களோ தடயப்பொருட்களோ குறித்த தேடுதலில் சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷரிஆ பல்கலைக்கழகம் குறித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை

மாணவர்கள் வெளிப்படையான புத்தக பை விசாரணைக்கு உத்தரவு

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்