சூடான செய்திகள் 1

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் எழுந்த நெருக்கடி நிலைமையை அடுத்து அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்

மதுமாதவ அரவிந்த இராஜினாமா