அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் பட்டியல் ஆசனத்தை சுழற்சி முறையில் இருவருக்கு வழங்கத் தீர்மானம் – நிசாம் காரியப்பர் எம்.பி

காரைதீவு பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள பட்டியல் ஆசனத்தை சுழற்சி முறையில் இருவருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் வெற்றியீட்டி ஓர் ஆசனத்தையும் மேலதிக பட்டியலில் ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளது.

அதேவேளை, மாளிகைக்காடு கிழக்கு மற்றும் மாவடிப்பள்ளி ஆகிய இரு வட்டாரங்களிலும் மு.கா வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் மாவடிப்பள்ளி வட்டாரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் எம்.என்.எம். ரணீஸ் இணங்கிக் கொண்டதற்கு அமைவாக குறித்த பட்டியல் ஆசனத்தை எம்.என்.எம். ரணீஸுக்கு முதல் இரு வருடங்களுக்கும் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளினால் தோல்வியடைந்த எம்.எச். நாசருக்கு அடுத்த வருடங்களுக்கும் சுழற்சி முறையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

13ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி!

பொது சுகாதார பரிசோதகர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்