உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து தௌபீக் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினரையும் கட்சியில் அவர் வகித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வாசிப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எம்.எஸ். தௌபீக்கை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்திருந்தார்.

Related posts

இரவு நேரத்தில் ஊரடங்கு அமுலுக்கு

மதங்களை அவமதித்த மத போதகர் ஜெராம் விரைவில் இலங்கைக்கு…..

அமைச்சர் சரோஜாவை சந்தித்த ACJU பிரதிநிதிகள்

editor