அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி எஸ்.எம்.நளீம் பதவிப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி ​தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

பேரிச்சம் பழத்திற்கான வரி குறைப்பு!