அரசியல்உள்நாடு

முஸ்லிம்களின் பிரச்சினைகள் எப்படி பொய்யாகும் ? இம்ரான் – பஸ்மின் முறுகல்

கிழக்கு மாகாணத்திலே காணப்படும் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் கண்டியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எப்படி பிழை என்று கூற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வியெழுப்பியிருந்தார்.

இன்று இடம்பெற்று வரும் பாராளுமன்ற விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று உங்களுடைய மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றை பாருங்கள்.

சமூக பிரச்சினை காணப்பட்டால் இதை நிவர்த்தி செய்ய உங்கள் அரசாங்கம் இருக்கின்றது.

நீங்கள் அதன் மூலமாக அந்த தீர்வை பெற வேண்டுமே ஒழிய, நீங்கள் சொல்வது பொய் இல்லையாயின் அதை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் தொடர்பில் பேசுகின்றீர்கள். எதிர்கட்சியினால் நிறுத்தப்பட்ட நேரத்துக்கு வருந்துகின்றீர்கள்.

அரசாங்கத்தை பிழை கூறுவதை நிறுத்திவிட்டு சரியான விடயங்களுக்கு போராடுங்கள்.

வரலாறு காணாத வகையில் அரச நிறுவனங்களுக்கு இன்று ஊடகங்கள் துணை போகின்றன. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாதியர்களின் உடையை அணிய முடியுமா? அதை எதன் அடிப்படையில் சிபாரிசு செய்தீர்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் சரிப், புதிய தாதியர் உடை தொடர்பாக அமைச்சரி விஜித ஹேரத்துடன் பேசியுள்ளோம். இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

குருநாகலில் கோர விபத்து – 4 பேர் பலி – பலர் வைத்தியசாலையில்

editor