வகைப்படுத்தப்படாத

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு தடை

(UDHAYAM, COLOMBO) – மே 17 இயக்கம் அறிவித்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே 17 இயக்கத்தால், இன்று மாலை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நிகழ்வை நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளதாக தமிழக செய்தகள் தெரிவித்துள்ளன.

2003 ஆம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என அறிக்கையொன்றினூடாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், மெரீனாவில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டங்களை நடத்துவதோ, ஒன்று கூடுவதோ சட்டவிரோதமென்றும் அதனை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

எனினும், இந்த நினைவேந்தல் நிகழ்வைக் கட்டாயமாக  நடத்தப்போவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பாரதீய ஜனதாக் கட்சியின் தூண்டுதலால் மாநில அரசு இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

இந்திய பிரதமர் தலதா மாளிகையில் வழிபாடு

அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று

ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்