வகைப்படுத்தப்படாத

முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக் கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30க்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2மணிக்குப்பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எதிர்வு கூறியுள்ளது

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு மாகாணத்தில்  இடைக்கிடையே 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்  என்று  திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல்  தொடர்பில் அவதானமாக  செயல்படுமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

Related posts

பொகவந்தலாவயில் மண்சரிவு 4 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்வு

பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகன இறக்குமதிக்கு தடை

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி…