உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ ரக (Hiace) வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், அவர்களைக் கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வாகனத்தில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார். அவர் தெய்வாதீனமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தவசீலன்

Related posts

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம்

editor

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு