உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் மனித எச்சம் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (04) அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் அங்கிருந்து இந்த மனித எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிக்கு சென்ற ஒருவர் இதனை அவதானித்த நிலையில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-தவசீலன்

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் விபத்து – மூன்று பேர் காயம்.

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor