சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

(UTVNEWS | COLOMBO) – அமைச்சர் சஜித் பிரேமதாசவினை ஓவியமாக வரைந்து அமைச்சரிடம் கையளித்த முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தை சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா என்ற இளைஞனின் திறமையை பாராட்டி தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் வேலை வாய்ப்பை வழங்கப்படவுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முல்லைத்தீவு – சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பின்னர் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் பட்டதாரி யுவதி ஒருவருக்கும் குறித்த அரச வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை பணித்தார்.

இவர்களுக்கான நியமன கடிதம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசர தகவல்களுக்காக இராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சி