உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து – புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

Yuan Wang 5 கப்பல் இன்று மீண்டும் சீனாவுக்கு

அமெரிக்க அலுவலக பிரதானியாக இலங்கை பிரஜை நியமனம்

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்