விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் சரிந்தது

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் நட்சத்திர வீரரான வேகப்பந்து வீச்சாளர்லசித் மலிங்க, தான் உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.

இந்த தகவலை மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“..லசித் மலிங்கா 12 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமாக இருக்கிறார். இன்னும் ஐந்து வருடங்களுக்கு எங்கள் அணியின் ஒரு பகுதியாக அவர் இருப்பதை நாக்கள் விரும்பினாலும், அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம்..”எனத் தெரிவித்துள்ளார்.

லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 தொடர்களில் விளையாடியுள்ளார். இதுவரை 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளமையும் இங்கு நினைவுகூறத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை

பாபர் அசாம் மீது பாலியல் வழக்கு

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி