வகைப்படுத்தப்படாத

மும்பையில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழப்பு

(UTV|INDIA)-மும்பையில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழந்துள்ளனர். 2 மாதக் குழந்தையொன்றும் இதன்போது உயிரிழந்துள்ளது.

தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்க நிர்வாகத்திற்குட்பட்ட குறித்த வைத்தியசாலையில் நேற்று அதிகாலை தீ பரவியுள்ளது.

10 தீயணைப்பு வாகனங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Related posts

செபஸ்தியன் குர்ஸ் பதவி நீக்கம்…

நீடிக்கும் வௌ்ள அபாய எச்சரிகை!

Anglican Church Head to visit Sri Lanka