உள்நாடு

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் பிணை மனு தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் பிணை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, இது தொடர்பான வாதங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 25 ஆம் திகதி முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது சேவை பெறுநர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 20 நாள் குழந்தை

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

editor

 Listeria எனும் மற்றுமொரு புதிய வைரஸ்