உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் துறையினரால் நேற்று (20) கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

புலமைப் பரிசில் பெறுபேறுகளை அறிய

காலி கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுப்பு