அரசியல்உள்நாடு

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் குழுவிடமிருந்து கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அதில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, ​​நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களை மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி, இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, அனைத்து பிரிவுகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

அரச புலனாய்வு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்

மாணவர்கள் போராட்டம் – காலவரையறையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகம்

editor