மீன்பிடித் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை முன்னாள் பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் பணிக்குழு அதிகாரி ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறைமுக அதிகார சபையில் தொழிலாளி வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து 245,000 ரூபாவைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும், தொழில் வழங்குவதற்கு 500,000 ரூபா இலஞ்சம் தேவை என்று சம்பந்தப்பட்ட நபரிடம் கூறியுள்ளனர், மேலும் முதலில் 250,000 ரூபாவை இலஞ்சமாக தந்துவிட்டு, மீதமுள்ள தொகையை தொழில் கிடைத்த பிறகு தருமாறு கேட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
