உள்நாடு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறிக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசேட மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஹேமசிறி பெர்ணான்டோ மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து, அவரை விடுவித்து விடுதலையாக்க விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்

தான்தோன்றிதனமாக அரசியலமைப்பில் தலையை நுழைக்கும் ஜனாதிபதி – ஜி. எல். பீரிஸ் குற்றச்சாட்டு

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான கார் கண்டுபிடிப்பு

editor