அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயில் முன்னிலையானார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதுடன், அதற்கமைய முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

Related posts

“MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவலில் ஒருவர் காயம் [UPDATE]

நிறைவேறியது, 2023 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்டம்

டிப்போக்களில் தற்போது போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது -SLTB